/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை மொபைல்போன் கடை ஊழியர் கைது
/
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை மொபைல்போன் கடை ஊழியர் கைது
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை மொபைல்போன் கடை ஊழியர் கைது
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை மொபைல்போன் கடை ஊழியர் கைது
ADDED : செப் 28, 2024 05:14 AM
கோவை: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தனுஷ் வெங்கட், 20. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு மொபைல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் 19 வயது இளம் பெண் ஒருவரும் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.
தனுஷ் அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இருவரும் வாட்ஸ் அப் வாயிலாக பேசி வந்தனர். சில நாட்களுக்கு முன், இரவில் இளம் பெண்ணை வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைத்த தனுஷ், அவரை கட்டாயப்படுத்தி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை, தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பினார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இதனை அந்த பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தார். அப்பெண் மேற்கு மகளிர் போலீசில் புகார் அளித்தார். தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.