/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'
/
'மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'
ADDED : டிச 06, 2024 11:19 PM

வால்பாறை; படிக்கும் வயதில் தேவையின்றி மொபைல்போன் பயன்படுத்துவதை மாணவியர் தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் தெரிவித்தனர்.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்தது. பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார்.
மகளிர் போலீஸ் ஏட்டு மீரா, மாணவியருக்கு பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகள் கூறினார். அவர் பேசியதாவது:
மாணவியர் வசிக்கும் பகுதியிலும், பள்ளிக்கு வரும் வழியிலும் பாலியல் ரீதியாக யாரேனும் துன்புறுத்தினால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் வாயிலாக தவறான தகவல் அனுப்பினாலும், ஆபாச வார்த்தைகளால் பேசினாலும் தைரியமாக புகார் தெரிவிக்கலாம். பெண்களுக்கான சட்டம் மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் அளிக்கும் புகாரில் உண்மை தன்மை இருக்க வேண்டும்.
பள்ளியில் படிக்கும் மாணவியர் வெளியிடங்களுக்கு செல்லும் போது, நாகரீகமான உடைகளை அணியவேண்டும். நல்ல சிந்தனைகள் மட்டுமே நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். நேரம் கிடைக்கும் போது, பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் ஒரு போதும் இடம் தரக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.