/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சாராயத்தை விட கேடானது மொபைல்போன்!'
/
'சாராயத்தை விட கேடானது மொபைல்போன்!'
ADDED : டிச 23, 2024 07:01 AM

தொண்டாமுத்தூர் : பேரூர் தமிழ் மன்றம் சார்பில், 11ம் ஆண்டு இலக்கியப் பெருவிழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது.
இவ்விழாவிற்கு, பேரூர் தமிழ் மன்றத்தின் செயலாளர் ரவி தலைமை வகித்தார். பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியின் செயலர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார்.
திரைப்பட நடிகரும், எழுத்தாளருமான ராஜேஷ், திரைப்பட பாடல் ஆசிரியர்கள் முத்துலிங்கம், யுகபாரதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடர்ந்து, தமிழின் பழமை, முக்கியத்துவம், சிறப்பம்சம் குறித்து பலரும் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, விருதுகளை வழங்கினார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திரைப்பட நடிகர் ராஜேஷ் பேசுகையில், இந்த உலகத்தை மாற்றி அமைப்பது, இருவர் மட்டுமே. ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் முதலாளி. மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதும், நமது சிந்தனைகள் எல்லாம் போய்விட்டது. தற்போதைய நிலைமையில், சாராயத்தை விடவும், மொபைல்போன்தான் மனிதர்களுக்கு கேடானது,என்றார்.