ADDED : டிச 17, 2025 05:03 AM
அ நிறம் | அளவு
கோவை: காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு, இலவச மாதிரி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 1299 காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு, கடந்த ஏப்., மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு, வரும் 21ம் தேதி நடத்தப்படுகிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி வரும் மாணவ, மாணவியருக்கு இலவச மாதிரித் தேர்வுகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால், இன்று நடத்தப்படுகிறது.
மாதிரி தேர்வு முடித்த அன்றே, தேர்வுக்கான விடை குறிப்புகள் மற்றும் மதிப்பெண் விபரங்களுக்கு மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.
