/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் மாதிரி திறனறித்தேர்வு
/
அரசு பள்ளிகளில் மாதிரி திறனறித்தேர்வு
ADDED : ஜன 31, 2024 11:10 PM

உடுமலை- உடுமலை அரசு நடுநிலைப்பள்ளிகளில், தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவி திட்ட மாதிரி திறனறித்தேர்வு நடந்தது.
அரசுப்பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு பிப்., 3ம்தேதி மாநில அளவில் நடக்கிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலை வகுப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகை அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில், இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நடுநிலைப்பள்ளிகளுக்கான மாதிரித்தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு, 25 பள்ளிகளில் மொத்தமாக 168 மாணவர்களுக்கு நடந்தது.
தொடக்கக் கல்வித்துறையின் அறுவுறுத்தல் படி, ஆசிரியர்கள் கண்ணபிரான், லீலாகண்ணன், சந்திரசேகர், மாரிமுத்து, ராஜசேகர் மாதிரி வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்தினர்.
தேர்வு காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை இரண்டு பிரிவுகளாக நடந்தது. தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகதீசன் தலைமை வகித்து, தேர்வு மையங்களை பார்வையிட்டார்.
வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆறுமுகம், மனோகரன் மேற்பார்வையிட்டனர்.