/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினா வங்கி புத்தகம்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினா வங்கி புத்தகம்
ADDED : பிப் 02, 2024 11:12 PM
பொள்ளாச்சி;பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா வங்கி புத்தகம், கோவையில் வினியோகிக்கப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வினியோகிக்கப்படுகிறது. இப்புத்தகம் தேவைப்படும் மாணவர்கள் பெற்றோருடன் அல்லது பள்ளிகள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
பிளஸ் 2 மாதிரி வினா வங்கி புத்தகம் 140 ரூபாய், அறிவியல் பிரிவு மற்றும் கலைப்பிரிவினருக்கு என இரு வகையாக வழங்கப்படுகிறது. இயற்பியல் தீர்வு புத்தகம், 70 ரூபாய். ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி என இரு மொழிகளிலும் கிடைக்கும். அரசு வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

