/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதிரி சோலார் கிராமங்கள் போட்டி
/
மாதிரி சோலார் கிராமங்கள் போட்டி
ADDED : அக் 03, 2025 09:37 PM
கோவை: சோலார் மின்னுற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்த, கடனுதவியுடன் மானியம் வழங்கப்படுகிறது.
மானியத்துடன் கிடைப்பதால், பொதுமக்கள் வீட்டின் கூரைகளில் மின்னுற்பத்தி செய்வதற்கு விண்ணப்பங்களை, ஆர்வமுடன் சமர்ப்பித்து வருகின்றனர். நாடு முழுவதும், ஒரு கோடி வீடுகளில், 2026-27க்குள் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாதிரி சோலார் கிராமங்கள் போட்டி அறிவிக்கப்பட்டது. அதன் படி, கோவையில் ஐந்து கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை முதல் கண்காணிக்கப்படுகிறது.
கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர்சதீஷ்குமார் கூறியதாவது: மாதிரி சோலார் கிராமங்கள் போட்டியில் அரசூர், சொலவம்பாளையம், புரவிபாளையம், தீத்திப்பாளையம், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகள், மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. கடந்த ஜூலை 1 முதல் 2026 ஜன., வரை அவகாசம் அளிக்கப்பட் டுள்ளது. எந்த கிராம ஊராட்சி அதிக சோலார் பயன்பாட்டை வைத்துள்ளனரோ, மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் மானியம் அளிக்க உள்ளது. அத்தொகையையும், சோலார் உற்பத்திக்காகவே பயன்படுத்த முடியும். இதுவரை கோவை மாவட்டத்தில், 6,000 வீடுகளுக்கு சோலார் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.