/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிதமான மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்
/
மிதமான மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்
ADDED : அக் 15, 2025 11:48 PM
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். இடியுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; லேசான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
வரும், 18 மற்றும் 19ம் தேதிகளில், காலை நேரத்தில், மேகமூட்டமாக காணப்படும். மாலை மற்றும் இரவு நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சூறைக்காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஐப்பசி பட்டத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், மழை பொழிவு, மண்ணில் ஈரப்பதத்துக்கு ஏற்ப, நிலத்தை உழவு செய்து தயார்படுத்திக்கொள்ளலாம், என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.