/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையாக கிடக்கும் குப்பைத்தொட்டி
/
குப்பையாக கிடக்கும் குப்பைத்தொட்டி
ADDED : அக் 15, 2025 11:47 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் அங்கன்வாடி அருகே குப்பை தொட்டி உபயோகம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி அருகே, குப்பை தொட்டிகள் உள்ளன. இதை முறையாக பயன்படுத்தாமல் தலைகீழாக கவிழ்த்தி கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால், கிராமத்தில் ஆங்காங்கே ரோட்டோரம் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் ரோட்டில் துர்நாற்றம் வீசுகிறது. இதுமட்டுமின்றி சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
இங்கு கொட்டப்படும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்தாலும், மீண்டும் ரோட்டோரம் குப்பை கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, கிடப்பில் போடப்பட்ட குப்பைத் தொட்டியை, முக்கிய இடங்களில் மக்கள் பயன்படுத்தும் வகையில் வைக்க வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'குடியிருப்பில் இருக்கும் குப்பையை சேகரிக்க தற்போது பேட்டரி வாகனங்கள் வந்து விட்டதால், குப்பைத் தொட்டியை கிடப்பில் போட்டுள்ளனர். ஆனால் இப்போதும் ரோட்டோரங்களில் பலர் குப்பை கொட்டி செல்கின்றனர். அதை தடுக்க முக்கிய பகுதிகளில் குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும்,' என்றனர்.