/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : மருத்துவ முகாம் நடத்தணும்
/
காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : மருத்துவ முகாம் நடத்தணும்
காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : மருத்துவ முகாம் நடத்தணும்
காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : மருத்துவ முகாம் நடத்தணும்
ADDED : அக் 15, 2025 11:47 PM
வால்பாறை: வால்பாறையில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள வால்பாறையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பருவமழை பெய்கிறது. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை பகுதி மக்களுக்கு சுாய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு காணப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில் பருவமழைக்கு பின், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில், நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு, நகராட்சி சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். வால்பாறையில் கொசு மருந்து அடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.