/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தல்
/
பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2025 11:45 PM
வால்பாறை: பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, காங்., கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வால்பாறை நகர காங்., கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், நகர தலைவர் அமீர் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதியில் பழுதடைந்த ரோடுகளை சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சீரமைக்க வேண்டும்.
மனித - வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண, வனத்துறையினர் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கும் வகையில் படகுசவாரி மற்றும் தாவரவியல் பூங்காவை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. கூட்டத்தில், ஐ.என்.டி.யு.சி., பொதுச்செயலாளர் ராமசந்திரன், சிறுபான்மை துறை சட்டசபை தொகுதி தலைவர் தேவா, நகர தலைவர் அப்துல்ரசீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.