sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., பழனிசாமியுடன் நயினார் பேச்சு

/

தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., பழனிசாமியுடன் நயினார் பேச்சு

தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., பழனிசாமியுடன் நயினார் பேச்சு

தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., பழனிசாமியுடன் நயினார் பேச்சு

10


UPDATED : பிப் 17, 2026 02:36 PM

ADDED : பிப் 17, 2026 06:24 AM

Google News

10

UPDATED : பிப் 17, 2026 02:36 PM ADDED : பிப் 17, 2026 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்ப்பது குறித்து, இரு தரப்பும் விவாதித்துள்ளதாக தெரிகிறது.

கூட்டணியில், 40 தொகுதிகளை, பா.ஜ., கேட்கிறது. தொகுதிகளை குறைக்க விரும்பும் பழனிசாமி, பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு வருகிறார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர், சென்னை பசுமை வழி சாலை வீட்டில், பழனிசாமியை சந்தித்தனர். இரவு 7:15 மணிக்கு துவங்கிய பேச்சு, இரவு 8:25 மணி வரை நடந்தது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


சட்டசபை தேர்தலில் பா.ஜ., போட்டியிட விரும்பும், 58 தொகுதிகள் பட்டியலை, ஏற்கனவே பழனிசாமியிடம் கொடுத்து விட்டோம். அதை இறுதி செய்வதற்காக தான், இந்த சந்திப்பு நடந்தது. அதன்படி, பா.ஜ.,வுக்கு 35 முதல் 40 தொகுதிகளை, அ.தி.மு.க., ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்தடுத்த பேச்சில், தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். அதேபோல, தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு அழைத்து வர பேச்சு நடக்கிறது.

அவர்கள் கேட்கும், ராஜ்யசபா எம்.பி., 'சீட்' குறித்து, பழனிசாமியிடம் பேசப்பட்டது. தே.மு.தி.க.,வை அழைத்து வரும் பொறுப்பை, அ.தி.மு.க., ஏற்றுள்ளது.

அதன்படியே, கோவையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின், இருவரும் ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

பழனிசாமியுடனான நயினார் சந்திப்பில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., நிர்வாகிகள் இன்னும் இணைந்து செயல்படாமல் இருப்பது குறித்தும், மார்ச் 1ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்தும் பேசப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us