/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவ. 2 வரை மிதமான மழை : காலநிலை மையம் தகவல்
/
நவ. 2 வரை மிதமான மழை : காலநிலை மையம் தகவல்
ADDED : அக் 30, 2025 11:02 PM
பொள்ளாச்சி:  கோவை மாவட்டத்தில், வரும் நவ. 2 வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என, வேளாண் காலநிலை மையம் அறிவித்துள்ளது.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், வரும் நவ. 2 வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மழை மற்றும் மண்ணின் ஈரப்பதம் காரணமாக, வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகும். விதைப்பு, நடவு, உரமிடல் போன்ற பணிகளை ஒத்திவைக்கவும்.
கால்நடை மற்றும் கோழிப்பண்ணை அருகே போதிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். நீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கால்நடை தீவனங்களை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாத தீவனங்களை கொடுப்பதன் வாயிலாக, பூஞ்சான தொற்றில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம். மழையில் புதிதாக முளைத்த புற்களை கால்நடைகளுக்கு கொடுக்கவோ, மேய்ச்சலுக்கு அனுமதிக்கவோ வேண்டாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

