/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சி
/
நவீன நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : நவ 20, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அமைந்துள்ள வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கான வணிக காப்பகத்தில் வரும் 29ம் தேதி, வேளாண் காடுகளுக்கான நவீன நாற்றங்கால் தொழில்நுட்பம் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
வணிக முறையில் வேளாண் காடுகளுக்கான நாற்றங்கால் நிறுவுதல், தரமான நாற்றங்கால் உற்பத்தி, தொழில்நுட்பம், பூச்சி மேலாண்மை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
ஓர் நபருக்கு பயிற்சி கட்டணம் ரூ.1,500 ஆகும். சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 7418470345 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.