/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கும்
/
நவீன கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கும்
ADDED : அக் 08, 2024 11:58 PM
அன்னுார் : அன்னுார் வட்டார வேளாண்துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்த தொழில் நுட்ப பயிற்சி வகுப்பு அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் புனிதா பேசுகையில், ''நீடித்த நவீன கரும்பு சாகுபடியால், கரும்பு பயிருக்கு, காற்று மற்றும் சூரிய ஒளி அதிகமாக கிடைக்கிறது. கரும்பில் சர்க்கரை சத்து கட்டுமானம் அதிகரிக்கிறது. மொத்த சாகுபடி செலவு குறைகிறது. ஊடு பயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது,'' என்றார்.
வேளாண் உதவி இயக்குனர் பிந்து பேசுகையில், ''மண் உயிர் காத்து மண் உயிர் காப்போம், என்னும், திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள், ஆடாதொடை, நொச்சி இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்,'' என்றார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் மாரியப்பன் பேசுகையில், ''சோளம், நிலக்கடலை, பச்சைபயறு போன்ற பயிர்களுக்கு, உயிர் உரம் மற்றும் நுண்ணுாட்டங்கள் ஐம்பது சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது,'' என்றார். பண்ணாரி அம்மன் கரும்பு ஆலை நிறுவன கரும்பு அலுவலர் சிவானந்த், நவீன கரும்பு சாகுபடி குறித்து தெரிவித்தார். பயிற்சி ஏற்பாடுகளை பிரபு மற்றும் முனுசாமி செய்திருந்தனர்.

