தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மோடி பிறந்தநாள் விழா பா.ஜ., வினர் உற்சாகம்

மோடி பிறந்தநாள் விழா பா.ஜ., வினர் உற்சாகம்

மோடி பிறந்தநாள் விழா பா.ஜ., வினர் உற்சாகம்


ADDED : செப் 18, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பிரதமர் நரேந்திர மோடியின், பிறந்தநாளையொட்டி கோவை மாநகர், மாவட்ட பா.ஜ., சார்பில் கொண்டாட்டங்கள் நடந்தன. கவுண்டம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், 3,001 ஆசீர்வாத தீபங்கள் ஏற்றப்பட்டன. பிரதமரின், 25 ஆண்டுகால பொது சேவையை போற்றும் வகையில் ‘வண்ணமயமான தேசம்’ என்ற தலைப்பில் வண்ணக்கோல நிகழ்ச்சி நடந்தது.

மகளிர் அணியினர் ஆர்வத்துடன் பங்கேற்று, நாட்டின் நவீன அடையாளமான வந்தே பாரத் ரயில் மற்றும் தேசிய கொடியின் வண்ணங்களை உள்ளடக்கிய பிரமாண்ட ரங்கோலிகளை வரைந்து அசத்தினர்.

கோவை மாநகர், மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் சின்னராஜ், சேலஞ்சர் துரை, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயா ரவி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கிருஷ்ண பிரசாத், மாவட்ட பொதுச் செயலாளர் மதன்மோகன், சுதாகர், ப்ரீத்தி லட்சுமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சபரி கிரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us