'காசு, பணம் தர முடியாது அன்பு மட்டுமே தரமுடியும்!'
'காசு, பணம் தர முடியாது அன்பு மட்டுமே தரமுடியும்!'
ADDED : ஏப் 06, 2026 05:08 PM

வால்பாறை: உங்களது பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பழங்குடியின மக்களிடம் நா.த.க., வேட்பாளர் ஓட்டு கேட்டார்.
வால்பாறை தொகுதியில் நா.த.க., சார்பில் வேட்பாளர் உமாதேவி போட்டியிடுகிறார். இவர், வால்பாறை, ஆனைமலை, கோட்டூர், அங்கலக்குறிச்சி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து, ஓட்டு சேகரித்து வருகிறார்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, வேட்பாளர் பேசியதாவது:
உங்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண தேர்தலில் நா.த.க.,க்கு ஓட்டளிக்க வேண்டும். என்னை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தால், பழங்குடியின மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன். எங்களால், உங்களுக்கு காசு, பணம் தர முடியாது, அன்பை மட்டும் தான் தரமுடியும். எங்களை நம்பி ஓட்டு போடுங்க. வால்பாறை தொகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.
இவ்வாறு பேசினார்.
வேட்பாளருடன் நா.த.க., மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ, வால்பாறை நகர பொறுப்பாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
