/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் ஒரே இரவில் மூன்று கோவில்களில் உண்டியல் திருட்டு
/
அன்னுாரில் ஒரே இரவில் மூன்று கோவில்களில் உண்டியல் திருட்டு
அன்னுாரில் ஒரே இரவில் மூன்று கோவில்களில் உண்டியல் திருட்டு
அன்னுாரில் ஒரே இரவில் மூன்று கோவில்களில் உண்டியல் திருட்டு
ADDED : ஏப் 25, 2025 11:17 PM
அன்னுார்: அன்னுார் அருகே ஒரே இரவில், மூன்று கோவில்களில் திருட்டு நடந்துள்ளது.
சாலையூரில் 150 ஆண்டுகள் பழமையான பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த 15,000 ரூபாய் மதிப்புள்ள ஆம்பிளிபையர் திருட்டுப் போயிருந்தது. உண்டியலையும் காணவில்லை. அங்கிருந்து 500 மீ., தொலைவில் தரிசு நிலத்தில் உண்டியல் கிடந்தது.
உண்டியலை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். முடியாததால் உண்டியலை விட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
இதே போல் அருகில் உள்ள கதவுகரை பகவதி அம்மன் கோவில் முன்புற கதவை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி உள்ளனர்.
தேவம்பாளையத்தில், நாதே கவுண்டன் புதூர் ரோட்டில், வாழ வழிகாட்டும் மகா முனியப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியுள்ளனர்.
ஒரே இரவில் மூன்று கோவில்களில் திருட்டு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சாலையூர் மற்றும் கதவுகரை கோவில்களில் இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ளது.
போலீசார் ரோந்து அதிகரிக்க வேண்டும். சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும்,' என சாலையூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.