தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுரை பிஸ்கட் வியாபாரியிடம்  பறிமுதல் செய்த பணம் வாபஸ்

 மதுரை பிஸ்கட் வியாபாரியிடம்  பறிமுதல் செய்த பணம் வாபஸ்

 மதுரை பிஸ்கட் வியாபாரியிடம்  பறிமுதல் செய்த பணம் வாபஸ்


ADDED : மார் 19, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பணம், பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி பாலகிருஷ்ணன். தாராபுரத்தில் இருந்து வந்து சோமனுார், சாமளாபுரத்தில், பிஸ்கட் விற்பனை செய்தார். அதற்கான வசூல் தொகை மற்றும் வங்கியில் எடுத்த பணம் சேர்த்து, 83 ஆயிரத்து, 500 ரூபாய் கொண்டு சென்றார். இதற்கு அவரிடம் அச்சமயத்தில் ஆவணம் ஏதுமில்லை. சூலுார் தொகுதி சாமளாபுரத்தில் பறக்கும் படையினர் சோதனையில் இத்தொகையை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பிஸ்கட் மொத்த கொள்முதல் செய்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்று வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு வினியோகித்ததற்கு வசூலித்த தொகை, மகனின் படிப்புக்காக வங்கி ஏ.டி.எம்.ல் இருந்து எடுத்த தொகை என ரூ.83,500 வைத்திருந்ததாக, பாலகிருஷ்ணன் மனு கொடுத்தார். ஆதார் அட்டை நகல், பணம் பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்களை சேகரித்து இணைத்திருந்தார்.

தேர்தல் பிரிவினரின் விசாரணையில், பிஸ்கட் வியாபாரி அவரது சொந்த பயன்பாட்டுக்கு பணம் கொண்டு சென்றதும், தேர்தலுக்கு முறைகேடாகவோ அல்லது இலவசமாகவோ கொண்டு செல்ல எடுத்துச் செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. அத்தொகையை விடுவிக்க, சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, விடுவிப்பு குழு தலைவரான, கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த வாகே உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us