/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
/
பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ADDED : செப் 23, 2025 10:52 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் பள்ளிவாசல் உள்ளது. இங்கு தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு உண்டியலின் மேல் பகுதி பூட்டை உடைத்து, அதில் இருந்த பணம் திருடப்பட்டது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டில் நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், 60, ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடம் இருந்து, 29 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றி, அவரை சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் என, தெரியவந்தது.