sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிரசவ நேர இறப்புகளை தடுக்க கண்காணிப்பு மையம்

/

பிரசவ நேர இறப்புகளை தடுக்க கண்காணிப்பு மையம்

பிரசவ நேர இறப்புகளை தடுக்க கண்காணிப்பு மையம்

பிரசவ நேர இறப்புகளை தடுக்க கண்காணிப்பு மையம்


ADDED : பிப் 19, 2025 09:23 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

கோவை மாவட்ட தாய்-சேய் கண்காணிப்பு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும், 'ஹை ரிஸ்க் மதர்' பட்டியலில் உள்ள கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் சுமார், 3,600 முதல் 3,800 பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

கோவையில், 2022-23ம் ஆண்டில் 35 கர்ப்பிணிகளும், 2023-24ல் 11 கர்ப்பிணிகளும் உயிரிழந்தனர். 2022-23ம் ஆண்டு பிரசவ நேர மரணம் அதிகமாக இருந்ததால், தாய்-சேய் கண்காணிப்பு மையம், கடந்தாண்டு துவக்கப்பட்டது.

இதில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு மற்றும் பிற நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் பட்டியல், மாவட்ட அளவில் தொகுக்கப்படுகிறது.

அவ்வாறு, தொகுக்கப்படும் பட்டியலில் உள்ள கர்ப்பிணிகளை, பிரசவத்திற்கு முன் கண்காணிப்பு மேற்கொண்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட தாய் - சேய் கண்காணிப்பு மைய அலுவலர் விஜயலட்சுமி கூறியதாவது:

இக்கண்காணிப்பு மையத்தில் பிரசவத்திற்கு ஒரு மாதம் முன், ஒரு வாரம் முன் என பிரித்து, நாள் ஒன்றுக்கு, 150 பேருக்கு போனில் பேசுவோம்.

இதுபோன்று, 'ஹை ரிஸ்க் மதர்' பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் குழந்தை பிறப்பை முன்கூட்டியே, திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

'ரிஸ்க்' உள்ளவர்கள், எந்த மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளப்போகிறோம், மருத்துவர் யார், தேதி என அனைத்திலும், தெளிவாக இருக்க அறிவுறுத்துகிறோம்.

'ரிஸ்க்' உள்ள கர்ப்பிணிகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பதில்லை; அரசு மருத்துவமனை அல்லது அவர்கள் விரும்பும், தனியார் மருத்துவமனையை பரிந்துரைக்கின்றோம். ஒவ்வொரு மாதமும், 3,600-3,800 பேரை கண்காணிக்கின்றோம். தவிர, பிரசவத்தில் பிறந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின், நலனும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இக்கண்காணிப்பு மையம், ரேஸ்கோர்சில் உள்ள கோவை மாவட்ட சுகாதாரத்துறை வளாகத்தின் தரைத்தளத்தில் செயல்படுகிறது. கவுன்சிலிங் தேவையுள்ள கர்ப்பிணிகள், தாய்மார்கள், 73973-02674 என்ற எண்ணை, தொடர்பு கொள்ளலாம்.

'பிரசவ நாட்களை கண்காணிக்கிறோம்'

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமியிடம் கேட்டபோது, ''கர்ப்பிணிகள் கட்டாயம் குழந்தை பிறப்பை முன்கூட்டி திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். 'பிக்மி' எண் வாயிலாக, 8வது வாரம் பதிவு செய்யப்படுகிறது. 'பர்த் பிளானிங் போர்டலில்' இது சார்ந்த பதிவுகளை தொடர்ந்து மேற்கொள்கிறோம். பிரசவத்திற்கு, 180 நாட்கள் முன்னரும், 180 நாட்கள் பின்னரும் கண்காணிப்பு பணிகள் நடக்கும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us