/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு'
/
'கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு'
'கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு'
'கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு'
ADDED : பிப் 03, 2024 12:18 AM

'கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்,'' என்கிறார், ஸ்ரீவத்சா ரியல் எஸ்டேட் நிறுவன இணை மேலாண் இயக்குனர் ராஜிவ் ராமசாமி.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி, தற்போது நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் வெறுமனே குடியிருப்புகள் மட்டுமின்றி குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறோம். சொல்லப்போனால் நாங்கள் 'மினி கார்ப்பரேசன்' போல் செயல்படுகிறோம்.
குடியிருப்பு திட்டங்களை தரமாக தருவதே, 'பிராண்ட்'; அதுவே நல்ல நிறுவனத்தின் அடையாளம். வெறுமனே விளம்பரம் செய்வதால் மட்டும் 'பிராண்ட்' பெயர் கிடைக்காது. நாங்கள் சந்தையில் அறிமுகமாகும் நவீனங்களை, கட்டுமானத்தில் புகுத்தி வருகிறோம்.
மக்கள் இன்று வாஸ்து முறைப்படி எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப, நவீன தொழில்நுட்பங்களுடன் 'வாஸ்து' அடிப்படையில், கட்டுமானங்களை அமைத்து தருகிறோம்.
நாங்கள் சென்னையில் ஒன்றும், கோவையில், 28 குடியிருப்பு திட்டங்களையும் முடித்துள்ளோம். வாடிக்கையாளர்கள் யோசனையையும் தாண்டி நாம் செய்துகொடுக்கும்போது, அனைத்தும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
அதன் காரணமாகவே, எங்களது பழைய வாடிக்கையாளர்கள், 30-40 சதவீதம் பேர் புதிய கட்டுமான திட்டங்களில் மீண்டும் ஆர்வம் காட்டுகின்றனர்; அவர்கள் வழியில் புதிதாக, 20-25 சதவீத வாடிக்கையாளர்கள் உருவாகின்றனர்.
அரசிடம் எதிர்பார்ப்பு
கட்டுமான அனுமதிக்கு, ஒற்றை சாளர முறையை அரசு கொண்டு வந்தாலும் இன்னும் மேம்படுத்தினால், அனுமதி விஷயத்தில் காலதாமதம் குறையும்.
கடந்த 10 ஆண்டுகளாக, கட்டுமான பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது, எங்களது நீண்டகால கோரிக்கை.
இவ்வாறு, அவர் கூறினார்.

