/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
300 சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிக்கறாங்க! நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
300 சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிக்கறாங்க! நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு
300 சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிக்கறாங்க! நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு
300 சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிக்கறாங்க! நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : ஏப் 21, 2025 04:56 AM

பொள்ளாச்சி : 'குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,' என, கோவை எஸ்.பி., தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், முக்கிய ரோடுகள் சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்பு பகுதிகளில், நன்கொடையாளர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அதில், பயன்பாடு இல்லாத கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர, ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு அறை ஏ.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டது.இதை எஸ்.பி., கார்த்திக்கேயன் துவக்கி வைத்தார்.
எஸ்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு கட்டமாக, பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சி.சி.டி.வி., நவீன கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில், ஏற்கனவே உள்ள, 200 கேமாராக்களை ஒரே இடத்தில் இணைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது.மேலும், பொள்ளாச்சி கிழக்கு, தாலுகா, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 100 கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நகரத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களின் பதிவெண்ணை பதிவு செய்யும் வகையில், ஐந்து ஏ.என்.பி.ஆர்., (ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் ரெக்கார்டு) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கோவை, பழநி, திருப்பூர் என அனைத்து வழித்தடங்களிலும் இந்த கேமராக்களின் வாயிலாக கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இதன் வாயிலாக, குற்றங்களை தடுக்கவும், கனிமவள கடத்தலை தடுக்கவும் உதவியாக இருக்கும். கண்காணிப்பு கேமரா செயல்பாடு கண்காணிப்பு, புதிய சட்டங்கள் குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்துக்கு இரண்டு கேமரா என்கிற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. சோதனைச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இளம் சிறார்கள், முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சில நேரத்தில் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர்.தற்போது இதற்கான ஆய்வு கூட்டம் நடத்தி, அவர்கள் மீதுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளன. அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனரா என கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.

