/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் பருவமழை; தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
வால்பாறையில் பருவமழை; தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : நவ 17, 2024 09:49 PM

வால்பாறை ; வடகிழக்குப்பருவமழை சாரல்மழையாக மாறியதால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
வால்பாறை மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக அங்கு வடகிழக்குப்பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழைக்கு இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. பருவ மழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 50 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர். இனி ஏப்ரல் மாதம் வரை தேயிலை உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும்' என்றனர்.
வால்பாறையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 150.44 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 185 கன அடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 655 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,)
சோலையாறு - 43, ஆழியாறு - 15, மேல்நீராறு - 9, கீழ்நிராறு - 3, காடம்பாறை - 7, மேல்ஆழியாறு - 9, சர்க்கார்பதி - 20, துணக்கடவு - 2, வேட்டைக்காரன் புதுார் - 7, நவமலை - 14, பொள்ளாச்சி - 4.5 என்ற அளவில் மழை பெய்துள்ளது.