தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பருவமழை முன்னெச்சரிக்கை: விவசாயிகளுக்கு அறிவுரை

பருவமழை முன்னெச்சரிக்கை: விவசாயிகளுக்கு அறிவுரை

பருவமழை முன்னெச்சரிக்கை: விவசாயிகளுக்கு அறிவுரை


UPDATED : நவ 10, 2026 10:25 PM

ADDED : நவ 10, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:25 PM ADDED : நவ 10, 2026 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சாகுபடி செய்துள்ள பயிர்களை அடங்கல், இ-அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். வாழை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டகலை பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

மழைக்காலத்தில் நீர்ப்பாசனம், உரமிடுவதை தற்காலிகமாக நிறுத்தவும்; வாழை போன்றவற்றுக்கு கம்புகளால் முட்டுக் கொடுத்து பாதுகாக்கவும்; அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டும். வயல்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்துவது அவசியம்.

பசுமைக்குடில்களை பலமாக நிலத்துடன் இணைத்து, கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us