/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளி பராமரிப்பாளருக்கு கிடைக்கும் மாதாந்திர உதவித்தொகை
/
மாற்றுத்திறனாளி பராமரிப்பாளருக்கு கிடைக்கும் மாதாந்திர உதவித்தொகை
மாற்றுத்திறனாளி பராமரிப்பாளருக்கு கிடைக்கும் மாதாந்திர உதவித்தொகை
மாற்றுத்திறனாளி பராமரிப்பாளருக்கு கிடைக்கும் மாதாந்திர உதவித்தொகை
ADDED : பிப் 08, 2024 06:39 AM
கோவை : 'மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவருக்கு, மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்கள் நேரில் வர, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 50க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரித்து, பயனாளிகளாக தேர்வு செய்தனர். இம்முகாம் தொடர்ந்து நடைபெறும் என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் தெரிவித்தனர்.