/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு பூங்காவில் கடமான் பலி
/
ஆழியாறு பூங்காவில் கடமான் பலி
ADDED : பிப் 23, 2026 05:31 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை அருகே, ஆழியாரில் வழி தவறி வந்த கடமான் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் வனப்பகுதியில் இருந்து கடமான் ஒன்று ஆழியார் பூங்கா பகுதிக்கு வந்தது. இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் பலர் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்தனர்.
இதைக் கண்ட கடமான் பயத்தில் ஓடிய போது, அருகாமையில் இருந்த வாய்க்காலில் தவறி விழுந்தது.
இதை கவனித்த சுற்றுலாப் பயணிகள், கடமானை மீட்க போராடிய போது வாய்க்காலில் தண்ணீர் வரத்து இருந்ததால் கடமான் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வாய்க்காலில் இருந்த கடமானை மீட்டு பார்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

