/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச பரிசோதனை முகாம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
இலவச பரிசோதனை முகாம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
இலவச பரிசோதனை முகாம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
இலவச பரிசோதனை முகாம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : பிப் 19, 2024 12:01 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில், கோவை கங்கா மருத்துவமனை, கோவை மெட்ரோபோலிஸ் ரோட்டரி சங்கம் மற்றும் கிணத்துக்கடவு நல்ல சமாரியன் சங்கம், உடுமலை நேசக்கரங்கள் இணைந்து, இலவச விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில், சர்க்கரை நோயால் வரும் பாதம் சார்ந்த பிரச்னைகளை கண்டறிந்து கால் துண்டித்தலை தடுத்தல் மற்றும் அதற்கான அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. தீ விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உதடு மற்றும் அன்னப்பிளவுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மற்றும் பெண்களுக்கான, மார்பக புற்றுநோயை கண்டறிந்து இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமில், நூற்றுக்கணக்கான பயனாளர்கள் பங்கேற்றனர்.