/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருங்கை, தக்காளி விலை குறையும்
/
முருங்கை, தக்காளி விலை குறையும்
ADDED : ஜன 01, 2025 05:12 AM

கோவை : தமிழகத்தில் முருங்கை விலை, கடந்த சில வாரங்களாக கடும் ஏற்றத்தை கண்டிருந்த நிலையில், நேற்று கோவை சந்தைகளில் மொத்த வியாபாரத்தின் கீழ், கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மொத்த விலை நிலவரத்தின் படி, கோவையில் உருளை கிழங்கு 25 ரூபாய், பெரிய வெங்காயம் 40 ரூபாய், சின்ன வெங்காயம் 75 ரூபாய், முருங்கை 100-120 ரூபாய், தக்காளி 10-15 ரூபாய், முட்டைக்கோஸ் 12 ரூபாய், பீன்ஸ் 55 ரூபாய், கேரட் 50 ரூபாய், கத்திரிக்காய் 30 ரூபாய், வெண்டை 30 ரூபாய், அவரைக்காய் 60 ரூபாய், புடலை மற்றும் சுரக்காய் 30 ரூபாய், பாகற்காய் 40 ரூபாய், பீர்க்கங்காய் 50 ரூபாய், காலிபிளவர் 25, பச்சைமிளகாய் 50 ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டது.
முருங்கை கடந்த மாதங்களில் ஒரு கிலோ, 400 ரூபாய் வரை இருந்தது. டிச., முதல் வாரத்தில் 350 ரூபாயாகவும், மூன்றாம் வாரத்தில் 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு கிலோ 100-120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
'தக்காளி விலை குறையும்'
தியாகி குமரன் மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், '' முருங்கை விலை அதிகம் இருந்தது. தற்போது, 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில வாரங்களுக்கு முன் தக்காளி விலையும், 70, 80 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது; தற்போது ஒரு கிலோ 10-15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், முருங்கை மற்றும் தக்காளி விலை குறையும்.
''தவிர, தற்போது தேங்காய் விலை வரத்து குறைவால், கிலோ 55 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு மாதங்களில் இதன் விலை சீராகும்,'' என்றார்.

