ADDED : பிப் 05, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
- நமது நிருபர் -:
முருங்கை வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் முருங்கைக்காய்கள், வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் வாயிலாக, சென்னை, கோவை, ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு மாதமாக கொள்முதல் நிலையத்தில் முருங்கை வரத்து குறைவால் விலை அதிகரித்தது. மூன்று டன் வந்தது. செடி, மர முருங்கை கிலோ, 50 ரூபாய்க்கும்,, கரும்பு முருங்கை, 80 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 30 ரூபாய் விலை அதிகரித்தது.
