/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருங்கை, காளான் மதிப்பு கூட்டு பயிற்சி
/
முருங்கை, காளான் மதிப்பு கூட்டு பயிற்சி
ADDED : ஜன 20, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முருங்கை, காளான் ஆகியவற்றில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு இரண்டு நாள் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில், முருங்கை பொடி, காளான் பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடைமிக்ஸ், ஊறுகாய், நுாடுல்ஸ், சூப் மிக்ஸ், சாறு பிழிதல் தொழில்நுட்பம் ஆகியவை வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்படும். வரும் 23, 24ம் தேதிகளில் காலை, 9:00 மணி முதல் 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.
ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணமாக, பயிற்சி முதல் நாளன்று செலுத்தவேண்டும். மேலும், விபரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.