/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
/
அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
ADDED : டிச 25, 2024 10:13 PM

சூலுார்; பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜெயந்தி விழா நடந்தது.
சூலுார் அடுத்த பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், அன்னை ஸ்ரீ சாரதா தேவியின், 172 வது ஜெயந்தி விழா நடந்தது. ஆரத்தியுடன் துவங்கிய விழாவில், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, அன்னையின் அஷ்டோத்திர சத நாமாவளி, குங்கும அர்ச்சனை நடந்தது. மாலை, ஆசிரம மாணவர்களின் பஜனை நடந்தது. ஆசிரம தலைவர் சுவாமினி சிவஞான பிரியம்பா தலைமை வகித்தார். சின்மயா மிஷன் சுவாமினி ஸம்ப்பிரதிஷ்டானந்தா பேசுகையில்,அன்னையின் கருத்துக்களை உள்வாங்கி வாழவேண்டும். அப்போது, வாழ்க்கை அன்புமயமானதாக மாறும். கருணை, அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை. அனைவரிடத்திலும் அன்பு காட்டுவோம், என்றார்.
ஆசிரம செயலாளர் சுவாமி ஆத்ம ராமானந்த மகராஜ் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள்பலர் பங்கேற்றனர்.

