ADDED : ஜூலை 09, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், வடகோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட செயலாளர் சுதா, மா.கம்யூ., கவுன்சிலர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.