/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட்டுக்கு பச்சிளங்குழந்தையுடன் வரும் தாய்மாருக்கு கவலை தீர்ந்தது!
/
கோர்ட்டுக்கு பச்சிளங்குழந்தையுடன் வரும் தாய்மாருக்கு கவலை தீர்ந்தது!
கோர்ட்டுக்கு பச்சிளங்குழந்தையுடன் வரும் தாய்மாருக்கு கவலை தீர்ந்தது!
கோர்ட்டுக்கு பச்சிளங்குழந்தையுடன் வரும் தாய்மாருக்கு கவலை தீர்ந்தது!
ADDED : ஜன 06, 2026 05:07 AM

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தாய்மார் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.
கோவை ஒருங்கிணைந்தை நீதிமன்ற வளாகத்தில், 55க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கு தொடர்பாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
குடும்ப நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்கொடுமை வழக்கு நீதிமன்றங்களுக்கு, விசாரணை தொடர்பாக பெண்கள் கை குழந்தைகளுடன் வருகின்றனர்.
வழக்கு விசாரணைக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு பசியாற்ற மறைவான இடமின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படும் கட்டடத்தின் தரை தளத்தில், முதன்மை போக்சோ கோர்ட் அருகில், தாய்மார் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் தாய்மார் உட்கார சேர், குழந்தைகள் ஓய்வு எடுக்க கட்டில், மின்விசிறி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பசியாற்ற விரும்பும் பெண்கள், இந்த அறையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அறைக்கான சாவி, குடும்ப நீதிமன்றம் மற்றும் போக்சோ கோர்ட் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

