/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
/
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ADDED : நவ 18, 2025 03:26 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில், மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. மாடுகள் தாக்குமோ என்ற அச்சம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளிலும், நகராட்சி அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சி பகுதிகளிலும், பலர் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை பகலில் அவிழ்த்து விடுகின்றனர்.
வீதிகளிலும், சாலையின் ஓரங்களிலும் கொட்டியுள்ள குப்பைகளில் உள்ள பேப்பர்கள், உணவு கழிவுகளை, மாடுகள் சாப்பிடுகின்றன. சில இடங்களில் இந்த மாடுகள் கூட்டமாக சாலையில் படுத்துக்கொள்கின்றன. சில இடங்களில் நிற்கின்றன. சில நேரங்களில் மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்கின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
சமீபகாலமாக மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள், கட்டி வளர்ப்பது இல்லை. பகலில் அவிழ்த்து விடுகின்றனர். இந்த மாடுகளால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம், பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் கட்டி வைத்து வளர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

