/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள் அவதி
/
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள் அவதி
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள் அவதி
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 17, 2024 11:43 PM

அன்னுார்; கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கணேசபுரத்தில், பல வாரங்களாக சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்தூரை அடுத்து கணேசபுரம் உள்ளது.
காட்டம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கணேசபுரத்தில் வேளாண் அலுவலகத்திற்கு எதிரே கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கணேசபுரத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் இங்கு குளம் போல் 100 மீட்டர் துாரத்திற்கு தேங்கி நின்று, தேசிய நெடுஞ்சாலைக்கு நிற்கிறது.
இதனால் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது சாலையில் நடந்து செல்வோர் மீது கழிவுநீர் தெறிக்கிறது. மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசு உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அன்னுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில், இது குறித்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
'விரைவில் கழிவுநீரை அகற்றவும், கழிவுநீர் வடிகாலை அமைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்,' என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.