/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்ற வாகன ஓட்டிகள்
/
முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்ற வாகன ஓட்டிகள்
ADDED : நவ 01, 2024 12:19 AM
கோவை : கோவையில் கடும் பனிமூட்டத்தால் சாலையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகன ஓட்டிகள் சென்றனர்.
கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி அடிக்கடி கன மழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. மாலை நேரங்களில் வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதுதவிர இரவு நேரங்களில் அதிகப்படியான குளிரும், பனிமூட்டம் நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக கோவையில் உக்கடம், அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ், பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அதிகாலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றனர்.
அதேபோல கோவையின் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்துார், ஆனைக்கட்டி, ஆலாந்துரை போன்ற பகுதிகளில் மாநகரின் மைய பகுதிகளை விட அதிகளவில் பனிமூட்டமும், குளிரும், இருந்து வருகிறது.
கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதமும் அதிகரித்து காணப்படுகிறது. பருவமழை தீவிரம் அடைந்த பின் பனிமூட்டம் படிப்படியாக குறைய துவங்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.