தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதியில் நின்ற தார் சாலை பணி வாகன ஓட்டுனர்கள் கவலை

 பாதியில் நின்ற தார் சாலை பணி வாகன ஓட்டுனர்கள் கவலை

 பாதியில் நின்ற தார் சாலை பணி வாகன ஓட்டுனர்கள் கவலை


ADDED : ஜன 28, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: 'மெட்டல் சாலை அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தார் ஊற்றப்படவில்லை' என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி, பச்சா கவுண்டனூரை சேர்ந்த பொதுமக்கள், அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது :

பச்சாக்கவுண்டனூருக்கு தெற்கே துவங்கி, வடக்கலூர் ஊராட்சி, கரியா கவுண்டனூர் வரை 2 கி. மீ., தொலைவிற்கு, ஊராட்சி சாலை உள்ளது.

இந்த பாதையில் கடந்த ஆண்டு தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பரப்பப்பட்டன. அதன் பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை தார் ஊற்றி தார் சாலை அமைக்கப்படவில்லை.

வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

பள்ளி வாகனங்கள், விவசாய வாகனங்கள் இந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள இந்த மெட்டல் சாலையை, தார் சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us