/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோட்டார் இயக்கி மழைநீர் அகற்றம்
/
மோட்டார் இயக்கி மழைநீர் அகற்றம்
ADDED : அக் 21, 2025 10:45 PM
கோவை: கோவை நகர்ப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
15வது வார்டு பெரியார் நகர் பகுதியில் தேங்கிய மழைநீர், மாநகராட்சி மழைநீர் உறிஞ்சும் வாகனம் மூலமாக வெளியேற்றப்பட்டது. 88-வது வார்டு அரசு பணியாளர் காலனி பகுதியில் தேங்கிய மழை நீர், மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டது.
இதேபோல், 14வது வார்டு முருகன் நகர், 87வது வார்டு சின்ன சுடுகாடு பகுதி, 1வது வார்டு வெள்ளக்கிணறு சின்னசாமி வீதி பகுதியில் மழை நீர் தேங்கியது. மாநகராட்சி பொறியியல் பிரிவினர் விரைந்து சென்று, மோட்டார் இயக்கி, தண்ணீரை அகற்றினர்.
பாலங்களுக்கு கீழே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கினால், மோட்டார் இயக்கி, உடனுக்குடன் அகற்றுவதற்கு உதவி/ இளம் பொறியாளர்கள் தலைமையில் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.