/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : பிப் 06, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ரென்ட்லி சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, ரென்ட்லி சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிர்வாக இயக்குனர் பிஜாய் சிவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில், ''இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, மாணவிகளுக்கு இன்டர்ன்ஷிப், பயிலரங்குகள் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்,'' என்றார்.