/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : நவ 08, 2024 06:57 AM

கோவை : கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மற்றும் பன்னாட்டு நிறுவனமான கேர்ஸாப்ட் குளோபல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு கல்லுாரி அரங்கில் நடந்தது.
நிகழ்வில், கல்லுாரி முதல்வர் சுதா மோகன்ராம் மற்றும் கேர்ஸாப்ட் குளோபல் நிறுவனத்தின் துணை உப தலைவர் சங்கீதக் குமார் அதியண்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறவும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கேர்ஸாப்ட் குளோபல் நிறுவன துணை உப தலைவர் சில்வஸ்ட்டர் பால், கல்லுாரி தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், கல்லுாரி இயந்திரவியல் துறை பேராசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.