ADDED : அக் 12, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:தீத்திபாளையத்தையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் குன்று மலையில், பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, நேற்றுமுன்தினம், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு பகல், 1:30 மணிக்கு, அன்னதானம் உண்டு கொண்டிருக்கும்போது, திடீரென அப்பகுதிக்கு, மலைத்தேனீக்கள் வந்தன. அத்தேனீக்கள் கடித்து, 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இருவருக்கு மட்டும், லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலுதவி பெற்ற பின் இருவரும் வீடு திரும்பினர்.