/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்ற எம்.பி., எதிர்ப்பு
/
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்ற எம்.பி., எதிர்ப்பு
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்ற எம்.பி., எதிர்ப்பு
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்ற எம்.பி., எதிர்ப்பு
ADDED : டிச 17, 2024 11:54 PM
கோவை; பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
கோவை போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் பழமையானது. போத்தனுார் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், தென்மாவட்ட மக்கள் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்கள் பெரிதும் உதவுகின்றன.
ஆனால், அவர்களுக்கு தேவையான ரயில்கள் போத்தனுாரில் நிற்பதில்லை. அவர்களின் வசதிக்காக, கோவை - மங்களூர், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி, எர்ணாகுளம் - காரைக்கால் உள்ளிட்ட ரயில்களை போத்தனுாரில் ஒரு நிமிடம் நிறுத்தி செல்ல வேண்டும்.
இதுதவிர, போத்தனுார், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக, கோவை - காரைக்கால் இடையேயான ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தெற்கு ரயில்வே, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த, நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை இரண்டாவது சந்திப்பாக மாற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவையை சேர்ந்த சில சங்கங்கள் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை கோவை(தெற்கு) என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றன. பழமை வாய்ந்த போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை, மாற்றம் செய்யக்கூடாது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.