/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.பி., சிவா பேச்சு; கமிஷனரிடம் புகார்
/
எம்.பி., சிவா பேச்சு; கமிஷனரிடம் புகார்
ADDED : ஜூலை 22, 2025 10:56 PM
கோவை; காமராஜர் குறித்து பேசிய எம்.பி., சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி, த.மா.கா., வினர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்(த.மா.கா.,) இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திக் கண்ணன் மற்றும் மாநில பொது செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர், அளித்த மனுவில், 'சென்னை பெரம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., சிவா காமராஜர் குறித்து உண்மைக்கு புறம்பாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், அவதூறாகவும் பேசியுள்ளார். இது மக்களின் உணர்வுகளையும், தேசிய சிந்தனை கொண்டவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஒரு சமுக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய, திருச்சி சிவா மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.