/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி., வலுக்கிறது எதிர்ப்பு எம்.எஸ்.எம்.இ., துறை போராட்ட அறிவிப்பு
/
கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி., வலுக்கிறது எதிர்ப்பு எம்.எஸ்.எம்.இ., துறை போராட்ட அறிவிப்பு
கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி., வலுக்கிறது எதிர்ப்பு எம்.எஸ்.எம்.இ., துறை போராட்ட அறிவிப்பு
கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி., வலுக்கிறது எதிர்ப்பு எம்.எஸ்.எம்.இ., துறை போராட்ட அறிவிப்பு
ADDED : டிச 09, 2024 04:36 AM
கோவை, : குறு, சிறு நிறுவனங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கினால், செலுத்தும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என்ற அறிவிப்புக்கு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வர்த்தக நிறுவனங்கள் செலுத்தும் கட்டட வாடகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டது.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வர்த்தகம் செய்யும் சிறு வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது, குறு, சிறு தொழில் நிறுவனங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தொழில் செய்வோர், தங்கள் உறவினர்களுக்குச் சொந்தமான கட்டடங்களில் தொழில் செய்தாலும், அதற்கு வாடகையின் மீது, 18 சதவீத வரி செலுத்த வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.'ஏற்கனவே, டி.டி.எஸ்., டி.சி.எஸ்., ஜி.எஸ்.டி.ஆர்., கணக்கு என, பல்வேறு வரிகள், அபராதம் என தினமும் அச்சத்துடன் வர்த்தகர்கள் உள்ளனர்.
மாநில அரசும் மின்கட்டண உயர்வு, உள்ளாட்சி அமைப்புகளின் வரி உயர்வு, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என பல்முனைத் தாக்குதல்கள் தொழில் செய்வோரை நிலைகுலையச் செய்து வரும் நிலையில், வாடகை மீதான ஜி.எஸ்.டி., என்பது , குறு, சிறு தொழில்களை முற்றிலும் முடக்கிவிடும். மத்திய அரசின் இந்நடவடிக்கை மேலும் துயரத்தைத் தருகிறது' என, பல்வேறு தொழில் அமைப்புகளும் கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்திருந்தன.
மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் தொழில், வர்த்தக அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், கடந்த 29ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தின.
எனினும், தொழில்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு செவிமடுக்காத நிலையில், கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடகைதாரர்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்யாவிட்டால், போராட்டம் பெரிய அளவில் முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என, தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.