/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் தேங்கிய மண்; பைக்கில் செல்வோர் அவதி
/
ரோட்டில் தேங்கிய மண்; பைக்கில் செல்வோர் அவதி
ADDED : மே 11, 2025 11:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆச்சிபட்டி அருகே, மழைக்கு அடித்து வரப்பட்ட மண் ரோட்டில் தேங்கியுள்ளதால், பைக் ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.
பொள்ளாச்சி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், பொள்ளாச்சி --- கோவை ரோட்டில் ஆச்சிபட்டி அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த மண், மழைக்கு அடித்து வரப்பட்டு ரோட்டில் பாதியளவுக்கு தேங்கியுள்ளது.
கோவை ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், பைக் ஓட்டுநர்கள் சிரமத்துடன் தடுமாறி செல்கின்றனர். இரவு நேர பயணத்தின் போது, இப்பகுதிகளில் வாகன விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டில் தேங்கியுள்ள மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.