/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் கோப்பை' கேரம் போட்டிகள்; அரசு ஊழியர்களின் 'குறி' தப்பவில்லை
/
'முதல்வர் கோப்பை' கேரம் போட்டிகள்; அரசு ஊழியர்களின் 'குறி' தப்பவில்லை
'முதல்வர் கோப்பை' கேரம் போட்டிகள்; அரசு ஊழியர்களின் 'குறி' தப்பவில்லை
'முதல்வர் கோப்பை' கேரம் போட்டிகள்; அரசு ஊழியர்களின் 'குறி' தப்பவில்லை
ADDED : செப் 25, 2024 12:07 AM

கோவை : அரசுத்துறை ஊழியர்களுக்கான கேரம் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவில், கதிர்வேல் ஜோடி அசத்தியது.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த, 10ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்களை தொடர்ந்து பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
நேரு ஸ்டேடியத்தில் தடகளம், பாரதியார் பல்கலையில் பேட்மின்டன், கால் பந்து, கற்பகம் பல்கலையில் கையுந்து, கபடி, இந்துஸ்தான் கல்லுாரியில் செஸ், கேரம் போட்டிகள் இடம்பெற்றன. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், அரசுத்துறை ஊழியர்களுக்கான கேரம் போட்டிகள் இரு நாட்கள் நடந்தன.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கதிர்வேல் முதலிடமும், சண்முகம் இரண்டாம் இடமும், துரைமுருகன் மூன்றாம் இடமும் பிடித்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில், பிரபா முதலிடமும், மேரிதிவ்யா இரண்டாம் இடமும், பிரியா மூன்றாம் இடமும் பிடித்தனர்.
இரட்டையர் ஆண்கள் பிரிவில், சண்முகம்-துரைமுருகன் ஜோடி முதலிடமும், கதிர்வேல்-சுரேந்திரன் ஜோடி இரண்டாம் இடமும், சிவசுப்ரமணியம்-ராஜ் ஜோடி மூன்றாம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தன.