/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாபகரமாக்க பல பயிர் சாகுபடி முறை
/
லாபகரமாக்க பல பயிர் சாகுபடி முறை
ADDED : ஜன 31, 2025 11:40 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவனாம்பாளையம் பகுதியில், பல பயிர் சாகுபடி முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு, தேவனாம்பாளையம் பகுதியில் தென்னை மற்றும் பயிர் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில், மணி வாசகம் என்ற விவசாயி, பல பயிர் சாகுபடி முறையை செயல்படுத்தி வருகிறார்.
அவர் கூறியதாவது:
தோட்டத்தில், 75 சென்ட் பரப்பளவில், சின்ன வெங்காயம், நிலக்கடலை மற்றும் வாழை சாகுபடி செய்து வருகிறோம். இதில், 500 சாம்பிராணி வகை வாழை கன்றுகள், 50 கிலோ சின்ன வெங்காயம் மற்றும் 45 கிலோ நிலக்கடலை நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, 40 நாட்கள் கடந்து விட்டது. விதை மற்றும் கன்று நடவு, பராமரிப்பு, உரம் என, 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது.
இதில், சின்ன வெங்காயம் 60 நாட்கள், நிலக்கடலை 120 நாட்கள் மற்றும் வாழை ஒரு வருடம் சாகுபடி காலம் என்பதால், கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், விளை பொருட்கள் விற்பனை நேரத்தில், மார்க்கெட் விலையை பொறுத்து லாபம் மாறுபடலாம்.
இவ்வாறு, கூறினார்.