/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருமானத்தை பெருக்க பல பயிர் சாகுபடி முறை
/
வருமானத்தை பெருக்க பல பயிர் சாகுபடி முறை
ADDED : ஜூன் 06, 2025 11:35 PM
நெகமம்; விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க, பல பயிர் சாகுபடி முறையை கடைப்பிடிக்க வேண்டும், என, இயற்கை விவசாயி தெரிவித்துள்ளார்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயிகள், தென்னை, வாழை, பயிர் வகைகள் என பயிரிட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலான விவசாயிகள் ஒரே பயிர் முறையை கடைபிடிக்கின்றனர்.
உதாரணமாக, நிலத்தில் ஒரே வகை பயிர் மட்டும் பயிரிடுவதால், விளைச்சலின் போது விலை குறைவாக இருக்கும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதைத்தவிர்க்க, பல பயிர் சாகுபடி முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டுமென, இயற்கை விவசாயி சம்பத்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு பகுதியில், அதிகளவு தென்னை விவசாயிகளே உள்ளனர். ஒரு ஏக்கர் பரப்பளவில், 70 முதல் 75 தென்னை மரம் நடவு செய்துள்ளனர். இதில், 20 சதவீத நிலம் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக ஜாதிக்காய், பாக்கு உள்ளிட்டவை சாகுபடி செய்யலாம்.
மேலும், குறிய கால பயிர்களை சாகுபடி செய்யலாம். இவ்வாறு செய்தால், ஒரு பயிரில் நஷ்டம் ஏற்படும் போது, பிற பயிர்களில் வருமானம் ஈட்ட முடியும் அல்லது நஷ்டத்தை ஈடு செய்ய முடியும். எனவே, விவசாயிகள் பல பயிர் சாகுபடி முறையை கடைபிடிக்க வேண்டும், என, தெரிவித்தார்.