/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது 'மல்டிலெவல்' கார் பார்க்கிங்
/
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது 'மல்டிலெவல்' கார் பார்க்கிங்
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது 'மல்டிலெவல்' கார் பார்க்கிங்
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது 'மல்டிலெவல்' கார் பார்க்கிங்
ADDED : அக் 30, 2025 11:26 PM
கோவை:  'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் ரூ.44.78 கோடியில் 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' கட்டப்பட்டது. மொத்தம், 4 தளங்கள்; ஒவ்வொரு தளத்திலும், 80 வீதம், 320 கார், மீதமுள்ள இடங்களில், 60 கார் சேர்த்து, ஒரே நேரத்தில், 380 எண்ணிக்கையில் நிறுத்தலாம். 5 'லிப்ட்' ரேக் அமைக்கப்பட்டிருக்கிறது. 2022ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு நிறுத்துவதற்கான கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டவில்லை. இரு ஆண்டுகளாக பயன்படாமல் இருந்ததால் லிப்ட் வீணாகியது. தரைத்தளத்தில் மட்டும் கார்கள் நிறுத்தப்பட்டு வந்தன. பேரிடர் சமயங்களில் பொருட்கள் இருப்பு வைப்பதற்கான குடோனாக பயன்படுத்தப்பட்டது.
இப்பிரச்னை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றதும், மீண்டும் லிப்ட் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். பழுதை சரி செய்து, நேற்று இயக்கிப் பார்க்கப்பட்டது. லிப்ட்டில் கார்கள் ஏற்றப்பட்டு, மேல்தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கமிஷனர் கூறுகையில், ''நேற்று, 160 கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அனைத்து கார்களையும் மேல்தளங்களில் நிறுத்தினால், கீழ்தளத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி கிடைக்கும். டி.பி.ரோட்டில் வாகனங்கள் நிறுத்திச் செல்வதை தடுத்து, பார்க்கிங் பகுதிக்கு அனுப்ப காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும், மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, 'சூப்பர் சக்கர்' என்கிற கழிவு நீர் உறிஞ்சும் அதிநவீன வாகனம், வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. 70வது வார்டு தியாகராயர் புது வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதன் செயல்பாட்டை கமிஷனர் நேரில் பார்வையிட்டார்.
பின், சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்க திட்ட அறிக்கை தயாரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

